பார்சிலோனா அணியின் பயிற்சியாளராக ஹெர்னாண்டஸ் நியமனம்.

ஸ்பெயினை சேர்ந்த பிரபல கால்பந்து கிளப்பான பார்சிலோனாவின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரொனால்டு கோமான் (நெதர்லாந்து) கடந்த மாதம் நீக்கப்பட்டார்.

இந்த சீசனுக்கான லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி புள்ளி பட்டியலில் 9-வது இடத்துக்கு பின்தங்கியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் பார்சிலோனா கிளப்பின் புதிய தலைமை பயிற்சியாளராக ஸ்பெயின் மற்றும் பார்சிலோனா அணியின் முன்னாள் நடுகள வீரரான 41 வயது சேவியர் ஹெர்னாண்டஸ் நியமிக்கப்பட்டிருப்பதாக அந்த கிளப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கத்தாரை சேர்ந்த அல் சாத் கிளப்பின் பயிற்சியாளராக இருந்த சேவியர் ஹெர்னாண்டஸ் பார்சிலோனா அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை அடுத்த வாரம் ஏற்பார் என்று தெரிகிறது. அவர் 2024-ம் ஆண்டு வரை ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.