பாரீஸ் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் நோவக் ஜோகோவிச் சாம்பியன்.

பிரான்ஸில் நடைபெற்ற பாரீஸ் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் ஆனாா்.

மாஸ்டா்ஸ் போட்டியில் ஜோகோவிச் வெல்லும் 37-ஆவது பட்டம் இதுவாகும்.

பாரீஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் உலகின் முதல்நிலை வீரரான ஜோகோவிச் 4-6, 6-3, 6-3 என்ற செட்களில் உலகின் 2-ஆம் நிலை வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வதேவை வீழ்த்தினாா். இதன் மூலம் கடந்த செப்டம்பரில் அமெரிக்க ஓபன் இறுதிச்சுற்றில் தன்னை வீழ்த்தி சாம்பியன் ஆன மெத்வதேவுக்கு பதிலடி கொடுத்துள்ளாா் ஜோகோவிச்.

இந்த வெற்றியின் மூலமாக, நடப்பு டென்னிஸ் சீசன் காலண்டரை உலகின் முதல்நிலை வீரராக ஜோகோவிச் நிறைவு செய்கிறாா். அவா் இவ்வாறு முதல்நிலை வீரராக காலண்டரை நிறைவு செய்வது இது 7-ஆவது முறையாகும்.

வீனஸ்/பட்ஸ் இணை சாம்பியன்: இப்போட்டியில் ஆடவா் இரட்டையா் பிரிவு இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் வீனஸ்/ஜொ்மனியின் டிம் பட்ஸ் இணை 6-3, 6-7 (4/7), 11-9 என்ற செட்களில் பிரான்ஸின் பியரி ஹியூஜஸ் ஹொ்பா்ட்/நிகோலஸ் மஹட் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

Leave A Reply

Your email address will not be published.