கனமழையால், குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனையில் வெள்ளநீர் புகுந்தது; நோயாளிகள் அவதி!

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதல் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.

அதன் ஒரு பகுதியாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளது. குரோம்பேட்டை அரசு மருத்துவமனை அமைந்துள்ள இடம் தாழ்வான பகுதி என்பதால் தொடர்ந்து மழை காலங்களில் மழை நீர் சூழ்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு முதல் பெய்த கனமழை காரணமாக மருத்துவமனை வளாகம் முழுவதும் அவசர சிக்கிச்சை பிரிவு தவிர பிரசவ வார்டு வளாகம், பொது மருத்துவமனை வளாகம் ஆகியவற்றில் மழை நீர் சூழ்ந்துள்ளது

சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் அறைகுள்ளேயே மழை நீர் சென்றதால் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து, நோயாளிகள் அனைவரும் மேல் தளத்திற்கு மாற்றப்பட்டனர் அத்தியாவசிய பொருட்கள் பெற முடியாமல அவர்கள் பாதிக்கப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

மழை நீர் சூழ்ந்துள்ளதால், மருத்துவமனை வளாகத்திலேயே நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதனால், உடனடியாக மழை நீரினை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.