வேட்பாளர்களுக்கான ஒழுக்க விதிகள் அடங்கிய கோவை வெளியீடு

எதிர்வரும் பொதுத்தேர்தலில் வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க விதிகள் தொடர்பான கோவையை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளதுடன் அதுகுறித்த விசேட வர்த்தமானியூடாக இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அத்துடன் பொதுத்தேர்தல் தொடர்பான ஊடக ஒழுங்கு விதிமுறைகளும் இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஊடக நிறுவனங்கள் இந்த ஒழுங்கு விதிமுறைகளை பின்பற்றுகின்றனவா என்பது தொடர்பில் ஆராய குழுவொன்றையும் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த ஒழுக்க கோவை மற்றும் ஊடக ஒழுங்குமுறைகள் ஆகியன பொதுத்தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் நாள் முதல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அமுலில் காணப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Comments are closed.