மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம்!

முல்லைத்தீவு மாவட்ட செயலக நடப்பாண்டுக்கான இறுதி கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் இன்று(17) ZOOM செயலி ஊடாக காலை 10.00மணிக்கு இடம்பெற்றது.

இங்கு உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் : கடந்த கால கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டத்தின் பல விடயங்கள் நிறைவேற்றப்படாது தொடர்ச்சித்தன்மையுடன் கூட்ட அறிக்கைகளில் வருகின்றதை சுட்டிக்காட்டிய அரசாங்க அதிபர் குறித்த விடயங்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தவேண்டும். மேலும் கொரோனா பேரிடர் காரணமாக பல தடைகள் ஏற்பட்டாலும் அதனை காரணமாக எடுத்துக்கொள்ளாது பதில்காணப்படாதுள்ள விடயங்களிற்கு அடுத்த காலாண்டுக்குள் தீர்வுகளை வினைத்திறனாக அடையும்படி கேட்டுக்கொண்டார்.

மாவட்ட செயலகம் மற்றும் அதன் கீழ் செயற்பட்டுவருகின்ற பிரதேச செயலகங்களின் உள்ளகக் கணக்காய்வு அவதானங்கள், நிதி செயற்பாட்டு முன்னேற்றங்கள், கணக்காய்வு ஐய வினாக்கள், அவற்றுக்கான பதிலளித்தல் தொடர்பாக குறித்த கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

மேலும் கடந்த கால கூட்ட அறிக்கை, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கணக்காய்வு முகாமைத்துவ குழு அமைப்பாளரும் பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் கே.லிங்ககேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் குழு உறுப்பினர்களான மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எம்.யேசுறெஜினோல்ட், கணக்காய்வு முகாமைத்துவ திணைக்கள உள்ளகக் கணக்காய்வாளர் வசந்தகுமார ஆகியோரின் பங்கபற்றலுடன் மாவட்ட பதில் கணக்காய்வு அதிதியட்சகர் எ.ஆதவன் அவர்களின் அவதானிப்புடன் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக, பிரதேச செயலகங்களின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.