வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோவிலில் மழைநீர் புகுந்தது..

வந்தவாசியில் தொடர் மழை காரணமாக ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் புகுந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தொடர் மழை காரணமாக கோவில் முழுவதும் முழங்கால் அளவிற்கு தண்ணீர் புகுந்தது பக்தர்கள் தண்ணீரில் நடந்தபடி சாமி தரிசனம் செய்தனர். வட தமிழகப் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது.

வந்தவாசிப் பகுதியில் நேற்று காலை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வந்தவாசி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலின் உள்ளே மழைநீர் புகுந்ததால் கோவில் முழுவதும் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் தண்ணீரில் நடந்தபடி ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் தரிசனம் செய்து செல்கின்றனர்.
உடனடியாக நகராட்சி அதிகாரிகள் கோயிலில் தேங்கி இருக்கும் மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.