மருத்துவர் ஆகும் யோகம்……

ஒருவர் மருத்துவர் ஆகவேண்டுஎன்றால்,சூரியன்,செவ்வாய்,கேது,சந்திரன் போன்றவர்கள் வலுத்திருக்கவேண்டும்.சூரியன் உச்சம் பெற்று 10,11-மிடத்தில் இருந்தாலும் கேந்திரத்தில் இருந்தாலும்,அதேபோல் ஆட்சியாகவோ,வலுவாகவோ இந்த இடத்தில் இருந்து கேதுவும்,சந்திரனும் வலுவாக இருந்தால் அவர் சிறந்த மருத்துவர்ஆவார்.

கேது ஜனன லக்னதிருக்கு 9,10, 11 ல் இடம் பெற்று இருந்தாலும் விருச்சக ராசியில் உச்சம் பெற்றாலும்,கடக ராசியில் உச்சம் பெற்று இருந்தாலும் அந்த ஜாதகற்கு மருத்துவ துறையில் வாய்ப்பு கிடைக்கும் .

கேது உச்சமாகவும், சந்திரன் உச்சமாகவும் உள்ளவர்கள் சிறந்த மருத்துவர் ஆகலாம் சூரியன் மேஷம் அல்லது விருச்கத்தில் இருக்க சந்திரன் சிம்மத்தில் நின்று பரிவர்தனையோகம் பெறலாம்
அல்லது சூரியன் மிருகசீரிஷம் ,சித்திரை ,அவிட்டம் போன்ற சந்திரன் சாரம் பெற்றுள்ள நட்சத்திரத்தில்இருக்க சந்திரன் ,கிருத்திகை ,உத்திரம் ,உத்திராடம் ஆகிய சூரியனின் சாரம் பெற்றுள்ள
நட்சத்திரத்தில் இருந்து சூரியனும் சந்திரனும் பரிவர்த்தனை பெற்றாலும் அந்த ஜாதகர் சிறப்பு மிக்க மருத்தவர் ஆகலாம்.

Leave A Reply

Your email address will not be published.