குறிஞ்சாக்கேணியில் கடற்படையினரால் பயணிகள் போக்குவரத்து ஆரம்பிப்பு.

திருகோணமலை குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற இழுவைப் படகு விபத்தின் பின்னர் . நேற்று (25) முதல் கடற்படையினர் பாதுகாப்பான பயணிகள் படகு போக்குவரத்தினை ஆரம்பித்துள்ளனர்.

குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகள் முடியும் வரை அப்பகுதியில் வசிப்பவர்கள் இந்த போக்குவரத்தினை பயன்படுத்த முடியும்.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கடற்படையினர் ஒரே நேரத்தில் 25 பயணிகளை பாதுகாப்பாக ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட Lagoon Craft ஒன்றை சேவையில் ஈடுபடுத்தியுள்ளனர் Lagoon Craft ஒவ்வொரு நாளும் காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரையிலும், மதியம் 12.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையிலும் சேவையில் இருக்கும்.

மேலும், பயணிகள் பாதுகாப்பாக கப்பலில் ஏறுவதற்கு கடற்படையினர் தற்காலிக இறங்குதுறையை அமைத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.