20 ஓவர்களை கொண்ட கடினப்பந்து போட்டியில் ஐக்கிய விளையாட்டு கழக அணி வெற்றி.

முள்ளியவளை வித்தியா விளையாட்டு கழகம் நடத்தும் அணிக்கு 20 ஓவர்களை கொண்ட கடினப்பந்து தொடரின் அணிக்கான இரண்டாவது போட்டி இன்று மாமூலை டைமன் விளையாட்டு கழகத்தில் நடைபெற்றது.

முள்ளியவளை வித்தியா விளையாட்டு கழகத்தை எதிர்கொண்ட ஐக்கிய விளையாட்டு கழக அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய வித்தியா அணி 18.3 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 115 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் குமுளமுனை ஐக்கிய விளையாட்டு கழகம் அணி சார்பாக சரணி நான்கு இலக்குகளையும் சிறி 3 இலக்குகளையும் விது ஒரு இலக்குகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 16.5 ஓவர்களில் 5 இலக்குகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் அதிக பட்சமாக சுதா 40(35) திலக்சன் 27(28) திவாகர் 21(19) பெற்றுக்கொடுத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.