சுமார் பத்து மீற்றர் உயரத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு பலியான சிறுவர்கள்.

அவுஸ்திரேலியாவில் குழந்தைகள் துள்ளி விளையாடும் Jumping Castle- இலிருந்து பாடசாலைச் சிறுவர்கள் தூக்கி வீசப்பட்ட சம்பவத்தில் 5 சிறுவர்கள் பலியாகியுள்ளதுடன்,மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் டஸ்மேனியாவின் Devonport பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பாடசாலையின் கடைசி நாளான நேற்று மாணவ – மாணவிகளின் விடுமுறையையொட்டி பாடசாலையினால் ஒழுங்கு செய்யப்பட்ட விளையாட்டு நிகழ்விலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

திடீரென்று வீசிய கடும் காற்றினால் மேலே பறந்த Jumping Castle-இலிருந்து வெளியே வீசப்பட்ட மாணவர்கள் சுமார் பத்து மீற்றர் உயரத்திலிருந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் காயமடைந்த மாணவ – மாணவிகளை வைத்தியசாலைகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன்,மேலும் இரண்டு குழந்தைகள் ஹெலிக்கொப்டர் மூலம் மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.