ஆஷஸ் 2021: கடைசி மூன்று போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு.

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பாரம்பரிய மிக்க ஆஷஸ் டெஸ்ட் தோடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் போட்டியை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, அடிலெய்டில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்டிலும் ஏறத்தாழ வெற்றியை நெருங்கிவிட்டது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையே இன்னும் மூன்று போட்டிகள் மீதமுள்ளன. இதையடுத்து அப்போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

அதன்படி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடமல் இருந்த கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹசில்வுட் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

மேலும் அவர்களுக்கு மாற்றாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம்பிடித்திருந்த ஜெய் ரிச்சர்ட்சன், மைக்கேல் நேசர் ஆகியோருக்கும் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ் (கே), ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசாக்னே, நாதன் லயன், மைக்கேல் நெசர், ஜெய் ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர், மிட்செல் ஸ்வெப்சன்.

Leave A Reply

Your email address will not be published.