பிபிஎல் ஆண்ட்ரூ டை பந்துவீச்சில் சுருண்டது ஹாபர்ட் ஹரிகேன்ஸ்.

பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் – ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி குர்டிஸ் பேட்டர்சன் அதிரடியாக விளையாடி 78 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளையும் 167 ரன்களைச் சேர்த்தனர். ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி தரப்பில் தாம்சன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து இலக்கை துரத்திய ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைக் இழந்து தடுமாறியது.

இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை மட்டுமே எடுத்தது. பெர்த் அணி தரப்பில் ஆண்ட்ரூ டை 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.