பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் பறகஹதெனிய பிரதேச மக்கள் மிகுந்த ஆர்வம்.

மாவத்தகம சுகாதார வைத்திய உத்தியோகஸ்தர் அலுவலகத்திற்கு உட்பட்ட பறகஹதெனிய, இலுக்கேவெல, சிங்கபுர, மெட்டிபொக்க கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகளிலுள்ள மக்களுக்கான தடுப்பூசிகள் இன்று பறகஹதெனிய பிரின்ஸ் கல்யாண மண்டபத்தில் இடம்பெற்றது.

30 வயது தொடக்கம் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதன் போது 4880 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன. மக்கள் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ள நீண்ட வரிசையில் காத்து தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்வதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இதன்போது வீதி அபிவிருத்தி அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் இணைப்பதிகாரி ரசான், பிரதான பொது சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.