ஒமிக்ரோன் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும்! – அரசிடம் எதிரணி கோரிக்கை.

“இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸ் பரவல் தீவிரமடைவதைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க வலியுறுத்தினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“உலகளாவிய ரீதியில் ஒமிக்ரோன் வைரஸ் தீவிரமாகப் பரவி வருகின்றது. கடந்த காலங்களில் டெல்டா வைரஸ் பரவல் குறித்து நாம் முன்கூட்டியே எச்சரித்தபோதிலும், அரசு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் காரணமாக நாடளாவிய ரீதியில் டெல்டா வைரஸ் பரவல் தீவிரமடைந்தது.

ஆகவே, அதனைப்போன்று அசமந்தமாகச் செயற்படாமல், ஒமிக்ரோன் வைரஸ் பரவல் நாட்டில் தீவிரமடைவதைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசிடம் வலியுறுத்துகின்றோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.