மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிப்பு.

இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது ஜனவரி 23ஆம் தேதி பார்போடாஸில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இத்தொடருக்கான 16 பேர் அடங்கிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஈயான் மோர்கன் தலைமை தாங்குகிறார்.
அதேசமயம் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் எந்த வீரரும் இந்த அணியில் சேர்க்கப்படவில்லை. மாற்றாக டேவிட் பெய்ன், ஜார்ஜ் கார்டன் ஆகிய அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இங்கிலாந்து அணி: ஈயான் மோர்கன் (கேப்டன்), மொயின் அலி, டாம் பான்டன், சாம் பில்லிங்ஸ், லியாம் டாசன், ஜார்ஜ் கார்டன், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டோன், சாகிப் மஹ்மூத், டைமல் மில்ஸ், டேவிட் பெய்ன், ஆதில் ரஷித், ஜேசன் ராய், ஃபில் சால்ட், ரீஸ் டாப்லி, ஜேம்ஸ் வின்ஸ்.

Leave A Reply

Your email address will not be published.