நைஜீரியாவை அரசு நாடுவது மகா தவறு! – சந்திம வீரக்கொடி எம்.பி. கடும் விசனம்.

“நைஜீரியா நாட்டிலிருந்து மசகு எண்ணெய்யைப் பெற்றுக்கொள்வதற்கு அரசால் எடுக்கப்பட்டுள்ள முடிவு மகா தவறாகும். அந்நாட்டு நிறுவனத்திடம் வெளிப்படைத்தன்மை இல்லை.”

இவ்வாறு ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளில் 75 வீதமானவை இந்த அரசாலே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட பிரச்சினைகளாகும். குறிப்பாக மசகு எண்ணெய் இறக்குமதிக்கான விலைமனுகோரல் தொடர்பில் நைஜீரிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் அது தொடர்பில் ஆழமாக சிந்தித்திருக்க வேண்டும்.

பெற்றோலியவளத்துறை அமைச்சராக நான் இருந்துள்ளேன். நைஜீரிய நிறுவனத்துடன் கொடுக்கல் – வாங்கலில் ஈடுபட முடியாது என்பதை உணர்ந்தேன். அந்நாட்டு நிறுவனத்திடம் வெளிப்படைத்தன்மை இல்லை. எனவே, எந்த அடிப்படையில் ஒப்பந்தத்தை இவர்கள் (அரசு) கைச்சாத்திட்டார்கள் எனத் தெரியவில்லை” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.