இங்கிலாந்தில் பொது முடக்க கட்டுபாடுகள் அமலுக்கு வந்தன.

இங்கிலாந்தில் ஒமைக்ரான் வகை கரோனா பரவலைத் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன.

அதன்படி, பல பகுதிகளில் இரவு கேளிக்கை விடுதிகள் மூடப்பட வேண்டும். மதுபானக் கூடங்கள், உணவகங்கள், திரையரங்குகளில் 6 பேருக்கு மேல் அனுமதிக்கப்படக் கூடாது. உள்ளரங்குகளில் 30 பேருக்கு மேலும் வெளியரங்குகளில் 50 பேருக்கு மேலும் குழுமக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரதமா் போரிஸ் ஜான்ஸன் இன்று நடத்தும் ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.