ஹட்டன் – கொழும்பு நெடுஞ்சாலை டெம்பஸ்டோன் சந்தியில் விபத்து

ஹட்டன் – கொழும்பு பிரதான நெடுஞ்சாலை டெம்பஸ்டோன் சந்தியில் , இன்று (06) மதியம் பஸ் வண்டியொன்று வீதியை விட்டு விலகிச் சென்று குடை சாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக, ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை முதல் இப்பகுதியில் மழை பெய்து வருவதால், குறித்த பஸ் வண்டி , வீதியை விட்டு விலகிக் குடை சாய்ந்துள்ளது . இதனால் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

மலையக பகுதியிலுள்ள வாகனச் சாரதிகள் தங்களது வாகனங்களை மிக அவதானமாக செலுத்துமாறு, ஹட்டன் பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் வலய அதிகாரி சூலனி வீரரட்ண வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments are closed.