NT Picture தயாரிப்பில் உருவான “பாகம் 5” Vimeo OTT தளத்தில் …

NT Picture தயாரிப்பில் வெளிவந்த “பாகம் 5” திரைப்படம் Vimeo OTT தளத்தில் தைப் பொங்கல் வெளியீடாக Vimeo OTT தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

குழந்தையாக மண்ணில் விழுந்து,
சிறுவராக குதுகலித்து, இளைஞராக மிடுக்குடன் நடந்து,
நடுத்தரவயதாகி நிதானித்து பொறுப்புக்களை சுமந்து முதுமையாகி வாழ்ந்த வாழ்க்கை அத்தனையும் ஆற அமர அசைபோட்டு விடைபெறும் நேரத்தில்
சிரிப்போடு மறையும் இந்த
பாகம் 5
எத்தனைபேருக்கு வரம் ?
எத்தனைபேருக்கு சாபம் ?


இத் திரைப்படம் ஏற்கனவே நோர்வே ஒஸ்லோவில் திரையிடப்பட்டது.

திரைப்படத்தைப் பார்ப்பதற்கு கட்டணமாக 3அமெரிக்க டொலர்களை (25 kr) செலுத்தி பார்க்கலாம்.

இதன் மூலம் NT Picture தயாரிக்கும், அடுத்த திரைப்படத்தின் தயாரிப்புக்கு தேவையான பொருளாதார செலவுகளுக்கு நீங்களும் சிறு பங்களிப்பை வழங்கியவர்கள் ஆகுறீர்கள் என்கிறார் தயாரிப்பாளர்.

புலம் பெயர்ந்து வாழும் ஈழ படைப்பாளிகளின் திரைப்படத் துறையின் தயாரிப்புச் செலவுகளில் ஒரு சிறுதொகையேனும் திரும்பப் பெறுதல் ஈழத்தயாரிப்புகளின் வாழ்தலுக்கு கொஞ்சம் நீருற்றுவதுபோலாகும் என்கின்றனர் திரைப்படக் குழுவினர்.

“தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்”

திரைப்படத்தைப் பார்ப்பதற்கு கீழ் உள்ள Ling ஐ அழுத்தவும்
https://ntp.vhx.tv/packages/paagam-5/videos/paagam-5-5

இப்படத்தை மற்றவர்களும் பார்க்கும்படி விளம்பரப்படுத்தி எமக்கு ஆதரவு தரவும்.
தொடர்புகளுக்கு; post@norwaytamilpicture.com

Leave A Reply

Your email address will not be published.