பொரளை தேவாலயத்தில் கைக்குண்டை வைக்க பயன்படுத்தப்பட்ட 13 வயது சிறுவன்
பொரளையில் உள்ள தேவாலயத்தில் கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டு செலோபின் டேப், தீப்பெட்டிகள் மற்றும் சந்தன குச்சிகளை பயன்படுத்தி தேவாலயத்தை கொழுத்த முயற்சிக்கப் கட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
நேற்று (11) மாலை 4.40 மணியளவில் ஆனந்த ராஜகருணா மாவத்தையில் உள்ள அனைத்து புனிதர்களின் ஆலயத்தின் சிலைக்கு அருகாமையில் இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் பேரில் 4 பேர் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களில் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் போது, குறித்த தேவாலயத்தில் பணிபுரியும் மருதானையைச் சேர்ந்த 56 வயதுடைய நபரே வெடிகுண்டு வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தேவாலயத்திற்கு அருகில் உள்ள தேவாலயத்திற்குச் செல்லும் 13 வயது சிறுவனை கைக்குண்டு வைக்க அந்த நபர் பயன்படுத்தியுள்ளார்.
சந்தேகநபர் சுமார் 16 வருடங்களாக தேவாலயத்துடன் தொடர்புடையவர் என்பதுடன், சுமார் 9 மாதங்களாக தேவாலயத்தில் நிரந்தரமாக தங்கியிருந்துள்ளார்.
அவர் தங்கியிருந்த அறையில் கைக்குண்டு வைக்க பயன்படுத்திய செலபினின் பகுதிகள் மற்றும் தீப்பெட்டிகள் ஆகியவற்றை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேகநபர் வெடிகுண்டை வைத்த நோக்கம், சந்தேகநபர் கைக்குண்டை பெற்ற விதம் மற்றும் சம்பவத்திற்கு உதவியவர்கள் என்பன கண்டறியப்பட வேண்டுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று STF அதிகாரிகளால் குண்டு செயலிழக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை அறிய சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்தில் கைக்குண்டை வைப்பதற்கு உதவிய 13 வயது குழந்தையை புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.