ஆனந்தசங்கரிக்குக் கொரோனாத் தொற்று உறுதி!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உடல் சுகவீனம் காரணமாக அவருக்கு நேற்று அன்டியன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. அத்துடன் பி.சி.ஆர். பிரிசோதனையும் அவருக்கு நேற்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த பரிசோதனையிலும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து யாழ்ப்பாணத்திலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகம் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, அவரது குடும்ப உறுப்பினர் மற்றும் இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள், சாரதி உள்ளிட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

வீ.ஆனந்தசங்கரியின் உடல்நிலையில் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும், அவரது வயதைக் கருத்தில்கொண்டு வைத்தியசாலை ஒன்றில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது எனவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.