பாடகியாக இருந்து தூதரக அதிகாரியான நீலா விக்கிரமசிங்க காலமானார்.

இலங்கையின் மூத்த பாடகியும் புதிதாக நியமிக்கப்பட்ட இராஜதந்திரியுமாக மிலான் நகரில் தூதரக அதிகாரியாக பதவி ஏற்ற நீலா விக்கிரமசிங்க இத்தாலியில் மாரடைப்பு காரணமாக காலமானார்.

71 வயதாக அவர் இலங்கையின் மூத்த பெண் பாடகர் மற்றும் இசைக்கலைஞரும் ஆவார்.

இறக்கும் போது அவருக்கு 71 வயது.
நீலா விக்ரமசிங்க இலங்கையில் வெற்றி பெற்ற ‘மாஸ்டர் சார்’ பாடலுக்காக மிகவும் பிரபலமானவர்.

சரசவிய விருது, ஜனாதிபதி விருது, சுமதி டெலி விருது, சொண்டா விருது மற்றும் வனிதா விருது ஆகியவற்றை பெற்றுள்ளார்.

மிலனில் உள்ள இலங்கையின் துணைத் தூதராக 10 நாட்களுக்கு முன்தான் நியமிக்கப்பட்டார்.

அவர் பின்னணிப் பாடகராக 67 படங்களுக்கு மேல் பாடியதோடு , நூற்றுக்கணக்கான தனி பாடல்களையும் சிங்கள மொழியில் பாடியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.