தெரியாமல் யாரும் ஸ்கிரீன்ஷொட் எடுக்க முடியாது மெட்டா நிறுவனம் அதிரடி.

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க் (Meta CEO Mark Zuckerberg) தனது பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான மெஸ்சேன்ஜ்ர் (Messenger) மெசேஜ்ஜிங் தலத்தில் ஒரு முக்கிய புதிய அம்சத்தை அறிவித்திருக்கிறார்.

இந்த புதிய அம்சம் மெஸ்சேன்ஜ்ரிலுள்ள பயநாளர்கள் தனியுரிமையைக் கணிசமாக மேம்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார். இனி மெஸ்சேன்ஜ்ர் மூலம் நீங்கள் மேற்கொள்ளும் ரகசிய உரையாடலில் யாரும் ஸ்கிரீன்ஷொட் எடுத்தால், உடனே அது அந்த குறித்த பயநாளருக்கு தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

டிஸப்பியரிங் மெசேஜ் இன்னும் அதிக பாதுகாப்புடன் பலப்படுகிறதா?

அதாவது, நீங்கள் மெஸ்சேன்ஜ்ர் மூலம் மேற்கொள்ளும் ரகசிய உரையாடலில், டிஸப்பியரிங் மெசேஜ் அம்சத்தை நீங்கள் பயன்படுத்தும் போது, எதிர் முனையில் உள்ள பயனாளர் உங்களின் டிஸப்பியரிங் மெசேஜ்களை பதிவு செய்வதற்காக ஸ்கிரீன்ஷாட் எடுத்தால், இனி அந்த பயனாளருக்கு ஸ்கிரீன்ஷொட் தொடர்பான அறிவிப்பு அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி மெஸ்சேன்ஜ்ர் பயனாளர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.