சீன விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மற்றுமொறு புதிய வைரஸ்.

நியோகோவ் (NeoCov) என்ற புதிய வைரஸ், சீன விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

வுஹான் விஞ்ஞானிகள் குழுவினால், தென்னாபிரிக்காவில் வெளவால்களில் இருந்து இந்த புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்காலம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியோகோவ் வைரஸின் போக்குகள், சார்ஸ் கோவ்-2 வைரஸைப் போல உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் 3இல் ஒருவரை கொல்லும் கொடிய தன்மை கொண்டது என சீனாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

எவ்வாறிருப்பினும், இந்த வைரஸ் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறதா என்பதைக் கண்டறிய மேலதிக ஆய்வுகள் அவசியமென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.