தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பது தற்கொலைக்கு சமம்.

தடுப்பூசி குறித்த வதந்திகள் மற்றும் பொய்யான செய்திகள் அதிகமாக உலாவி வரும் நிலையில் கொரோனா மற்றும் தடுப்பூசிகள் குறித்து பொய் செய்திகளை நம்பவேண்டாம் என போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.

கொரோனா மூன்றாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் ஒரே நாளில் 32,76,816 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 37,00,43,261 பேராக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 9,733 பேர் மரணமடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 22,08,287 பேர் மீண்டுள்ள நிலையில், இதன் மூலம் உலகம் முழுவதும் 29,22,73,543 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை உலகம் முழுவதும் மொத்தம் 56,66,789 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து உலகம் முழுவதும் ஒரு நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பு ஊசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. ஃபைசர், அஸ்டிரேஜனக்கா, ஸ்புட்னிக், கோவாக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அரசு சார்பிலும் தனியார் நிறுவனங்களின் சார்பிலும் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு இந்தியாவில் இலவசமாக வழங்கப்படுகிறது மேலும் தனியார் மருத்துவமனைகளிலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் மட்டும் இதுவரை 165 கோடி பேருக்கு மேலே தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை சுமார் 400 கோடி மக்கள் தடுப்பூசி பெற்றிருக்கலாம் என தரவுகள் தெரிவிக்கின்றன. தடுப்பூசி ஒன்றுதான் தொற்று நோயில் இருந்து தப்பிக்கும் ஆயுதம் என தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்திகள் பரப்பப்பட்டு வரும் நிலையில் தடுப்பூசி குறித்த வதந்திகள் மற்றும் பொய்யான செய்திகளை அதிகமாக உலாவி வருகிறது. இந்த நிலையில் கொரோனா மற்றும் தடுப்பூசிகள் குறித்து பொய் செய்திகளை நம்பவேண்டாம் என போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.

கத்தோலிக்க மத குருவான போப் பிரான்சிஸ் தடுப்பூசியை அன்பின் செயல் எனவும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பது தற்கொலைக்கு சமம் என தொடர்ந்து தடுப்பூசிக்கு ஆதரவாக பேசி வருகிறார் தற்போது தடுப்பூசி போடுவது மக்களின் தார்மீகக் கடமை என அவர் கூறியுள்ளார். ஐரோப்பாவின் ரோம் நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கொரோனா குறித்தும் அதற்கான தடுப்பூசி குறித்தும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன எனவும் அவற்றை நம்பாமல் அறிவியல் தரவுகளின் அடிப்படையில் துல்லியமான தகவல்களை அறிவது மனித உரிமை என கூறியுள்ளார். குறிப்பாக சமூக வலைதளங்களை காணப்படும் தகவல்களில் உண்மை எது பொய் எது என்பதை ஆராய்ந்து பார்க்கும் திறன் இல்லாதோருக்கு துல்லிய விபரங்கள் சென்றடைய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தடுப்பூசி மற்றும் கொரோனா குறித்த பொய் செய்திகள் மறுக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ள போப் பிரான்சிஸ், அதேசமயம் போதிய விழிப்புணர்வு அல்லது பொறுப்பின்றி கிடைக்கும் தகவல்களை நம்பும் தனிநபரின் மரியாதையும் காக்கப்பட வேண்டும் எனவும், பொய் தகவல் என்ற வலையில் விழுந்துவிட்ட அவர்களிடம் கருணையுடன் பேசி உண்மையை எடுத்துக் கூற வேண்டிய பொறுப்பு கத்தோலிக்க திருச்சபைக்கு உள்ளது எனவும் போப் பிரான்சிஸ் கூறியுள்ளார். போப் பிரான்சிஸ் ஏற்கனவே முழுமையாக தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.