சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டான்’. இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, கே.எம்.பாஸ்கரன் மற்றும் நாகூரன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்சன் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில் படக்குளு சரியான வெளியீட்டுத் தேதியை எதிர்பார்த்துக்கொண்டிருந்தது .

இது குறித்து அவரது தயாரிப்பு நிறுவனம் சமூக ஊடகங்களில், “ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ‘டான்’ மார்ச் 25 அன்று திரைக்கு வரும். தயாராகுங்கள்!” என தெரிவித்துள்ளது.

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “மார்ச் 25 முதல் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் உங்களை மகிழ்விக்க டான் வரவுள்ளது” என்று அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.