அரசு கவிழும்! – கம்மன்பில விளாசல்.

ராஜபக்ச அரசு கவிழும் தருணம் வந்துள்ளது என்று புதிய ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“இந்த அரசை வீழ்த்துவதற்கு இரு முனைத்தாக்குதல் தொடுக்கப்படும்.

ஒன்று பாதீட்டை தோற்கடிப்பதன் மூலம் அரசை கவிழ்க்கலாம், இரண்டாவது, அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரலாம்.

தற்போதைய அரசு பெரும்பான்மையை இலகுவாக இழக்க நேரிடும்.

ஆளுங்கட்சி வசம் தற்போது 123 ஆசனங்களே உள்ளன. எனவே, இன்னும் 12 பேர் அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டால், அரசு பெரும்பான்மையை இழந்துவிடும்.

தற்போதைய சூழ்நிலையில் 12 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அரசு மீது அதிருப்தியில் உள்ளனர். எனவே, உரிய தருணம் வரும்போது எமது பலத்தைக் காட்டுவோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.