தனியார் துறைகள் முடங்கும் ஆபத்து? ரணில் எச்சரிக்கை.

இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைமை மே மாதத்தின் பின்னர் தீவிரமடைந்து பொருட்கள் வாங்க பணம் இல்லாமல் போகும் நிலை ஏற்படும் எனவும் இதனால் ஜுன் மாதமளவில் தனியார் துறைகள் முடக்கப்படலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

புத்தாண்டு கால பஞ்சாங்கத்தில் புண்ணிகாலமும் இல்லை உணவு பரிமாறுவதற்கு நேரமும் இல்லை. மேசையில் வைக்கும் பலகாரத்துக்கு 75 ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது. புத்தாண்டு காலத்தில் மூன்று நேரமும் உண்ணமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருள், மின்வெட்டு, எரிவாயு என மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினையாக உள்ளது.

அழுத்தம் காரணமாக மக்கள் போராட்டம் செய்கின்றனர் நிலைமையை கட்டுப்படுத்த இராணுவத்தினரை ஈடுபடுத்த வேண்டாம் பொலிஸாருக்கே சிவில் நிர்வாக அதிகாரம் உண்டு இதனால் இராணுவத்தினரை ஈடுபடுத்த முடியாது இராணுவம் அரசியலமைப்பை மீறினால் நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜனாதிபதி போகமாட்டேன் என கூறுகிறார். என்ன செய்ய போகின்றார் என்பதை மக்களுக்கு கூறவேண்டும்

நாட்டின் நீதி அதிகாரம் பாராளுமன்றத்திற்கே இருக்கிறது. அதன்படி சபை அந்த அதிகாரத்தை எடுக்க வேண்டும். நீதி நிர்வாகம் தொடர்பான சட்டத்தை இங்கு கொண்டு வரவேண்டும்.

மத்திய வங்கி இன்று றிம்மிலேயே ஓடுகிறது. இந்தியாவின் உதவி இல்லை என்றால் எரிபொருளுக்கு என்னவாகும் என்பதை சிந்திக்க வேண்டும். எங்களுக்கு மே மாதத்துக்கு பின்னர் பணம் இல்லாமல் போகும் ஜுன் மாதமளவில் தனியார் துறைகள் மூடலாம் அவர்களிடம் பணம் இல்லை. இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேசுவதற்கு பாராளுமன்றத்தில் தீர்மானம் எடுக்க வேண்டும்.

நானும் சுமந்திரனும் சர்வகட்சி கூட்டத்தில் முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே இந்த விவாதம் இடம்பெறுவதாக அவர் தெரிவித்தார். மேலும் பந்துல குணவர்தன கூறுவதை போன்று நிதி முகாமைத்துவ வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.