இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று…

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று (09) பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நடைபெற உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி ,அந்நாட்டு பாராளுமன்றத்தைக் கலைக்கும் பிரதமரின் முடிவைத் தொடர்ந்து, அந்தத் தீர்ப்பின் சட்டப்பூர்வ தன்மையை எதிர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர், ஆனால் எதிர்க்கட்சி வெற்றி பெற்றது.

திட்டமிட்டபடி பாகிஸ்தான் பிரதமர் இன்று நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆஜராக வேண்டும்.

மேலும் ,பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமர் 172 இடங்களை இழந்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையைப் பெற்றுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.