சட்டபூர்வமாக நானே நிதி அமைச்சர்! – அழுத்தம் காரணமாகவே இராஜிநாமா செய்தேன்.

“நிதி அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்யுமாறு எனது குடும்ப உறுப்பினர்களும் அழுத்தம் கொடுத்தனர். எனவே, நான் நிதி அமைச்சர் பதவியைத் துறந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.”

இவ்வாறு நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

சிங்கள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில், கலந்துகொண்டு அவர் இந்தத் விடயத்தைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் தற்போது நான்தான் நிதி அமைச்சர். சட்டபூர்வமாகவே அப்பதவியை வகிக்கின்றேன். எனது தலைமையிலான குழுவே 18ஆம் திகதி சர்வதேச நாணய நிதியம் செல்லவுள்ளது.

நிதி அமைச்சுப் பதவியை ஏற்க நான் தயாராக இருக்கவில்லை. ஆனால், ஆளுங்கட்சியின் விடுத்த கோரிக்கையால்தான் அந்தப் பதவியை ஏற்றேன். அதன்பின்னர் எனக்கு அழுத்தங்கள் வந்தன. குடும்ப உறுப்பினர்கள்கூட, பதவி துறக்குமாறு வலியுறுத்தினர்.

பொருளாதார நிபுணர்கள்தான் நிதி அமைச்சுப் பதவியை ஏற்க வேண்டும் என்ற கருத்து சமூகத்திலும் நிலவியது. எனவே, தகுதியான ஒருவரை அப்பதவிக்கு நியமிக்க வழிவிட்டே நான் பதவி விலகினேன். எனினும், எவரும் அந்தப் பதவியை ஏற்கவில்லை. அதனால்தான் நாட்டு நலன் கருதி நான் ஏற்றேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.