நாளை சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ள ஆசிரியர் சங்கம்.

நாளைய தினம் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

விலையேற்றமும்- குடும்ப பொருளாதார நிலையும் மாணவர்களின் வரவினையும் கணிசமாக பாதித்துள்ளன.

அத்துடன் – தூர பிரதேசங்களிற்கு சென்று கடமையாற்றும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொருளாதார நெருக்கடிகளை மட்டுமல்ல – குடும்பச் சுமைகளுடன் போக்குவரத்துச் சிரமங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சூழலில் கடமைகளுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளன. வரிசையில் நின்றே நாட்டுமக்கள் தேவைகளைப் பூர்த்திசெய்யும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.

கஸ்ட – அதிகஸ்ட பிரதேசங்களில் கடமையாற்றும் ஆசிரியர்கள் – எரிபொருள் தட்டுப்பாடான இன்றைய சூழலிலும் – விரலடையாள இயந்திர நடைமுறைகளால் தொழில் ரீதியாகவும் – உளவியல் ரீதியாகவும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.

எனவே – இவற்றுக்கான உடனடித் தீர்வை அரசாங்கம் வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை நடைபெறும் சுகயீன லீவு போராட்டத்தில் அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களையும் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்வதுடன் – அன்றைய தினம் மாணவர்களின் பெற்றோர்கள் வீணான சிரமங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என்று.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.