பணி புணிப்புறக்கணிப்பில் தபால் பணியாளர்கள்

தபால் பணியாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் மேலதிக நேர புணிப்புறக்ணிப்பினை முன்னெடுத்து வருவதாக ஐக்கிய தேசிய தபால் பணியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எச்.ஆர். நிஹால் தெரிவித்துள்ளார்.

தபால் பணியாளர்களின் மேலதிக நேர கொடுப்பனவை நிறுத்துவதற்காக மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக இந்த பணிப்புறக்கணிப்பு இடம் பெற்று வருவதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சனிக்கிழமை நாளில் தபால் நிலையங்களை மூடுவதற்கு எடுத்துள்ள தீர்மானங்களுக்கு எதிராகவும் பணிப்புறக்கணிப்பு இடம் பெற்று வருவதாக பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.