நிறைவேற்று ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முதன்முறையாக பாராளுமன்றத்தில்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்பிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு சகல திட்டங்களையும் வகுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்படுவது வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.

பொதுவாக ஜனாதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுத் தீர்மானம் முன்வைக்கப்படுகின்ற போதிலும், ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இதுவரை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றுவதன் மூலம் ஜனாதிபதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கை இல்லை என்பதை நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் உறுதிப்படுத்துவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.