ஸ்பெயினில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்.

ஸ்பெயின் நாட்டில் சரக்கு ரயில் தடம் புரண்டு எதிரே வந்த புறநகர் பயணிகள் ரயில் மீது நேருக்கு நேர் மோதியதில் ரயில் எஞ்சின் சாரதி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து சம்பவம் நேற்று இடம்பெற்றாதாக கூறப்படுகின்றது. பார்சிலோனாவில் இருந்து 14km தொலைவில் உள்ள SantBoide Llobregat நகரில் உள்ள ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது தண்டவாளத்தில் இருந்து விலகிய சரக்கு ரயில் பலமாக மோதியது.

விபத்தில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த நிலையில் 85 பயணிகள் காயமடைந்தனர். இந்நிலையில் காயமடைந்தவரகள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.