சம்பளம் கொடுக்க பணம் இல்லை: எங்களுக்கும் பணம் அச்சிடும் இயந்திரங்களை தாருங்கள் : தனியார் நிறுவனங்கள்

ஸ்ரீலங்காவின் ஐக்கிய தேசிய வியாபார கூட்டமைப்பு , அடுத்த மாதத்தில் அதன் அனைத்து வர்த்தகங்களும் வீழ்ச்சியடையும் அபாயத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து இனி தங்களது தொழிலை நடத்த முடியாது என அவர்கள் தெரிவித்தனர்.

இதுவரை காலமும் சேமிப்பில் தங்களுடைய தொழில்களை நடத்தி வந்ததாகவும், தற்போது அதனை தொடர்வது மிகவும் கடினமாக இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு பணம் அச்சடிக்கப்படுவதாகவும், ஆனால் தனியார் துறை ஊழியர்களுக்கு என்ன செய்வது என சங்கத்தின் தலைவர் டானியா அபயசுந்தர கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு பணம் அச்சடித்து அமைச்சர் ஊதியம் வழங்கினால் , எங்களுக்கும் பணம் அச்சிட அச்சு இயந்திரங்களை தாருங்கள் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இந்தக் கருத்துக்களை வெளியிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.