புகைத்தலால் தினமும் 55 பேர் பரிதாபச் சாவு!

இலங்கையில் புகைத்தல் காரணமாக தினமும் சராசரியாக 55 பேர் மரணத்தைத் தழுவுகின்றனர். அதேவேளை, வருடத்துக்குச் சராசரியாக 20 ஆயிரம் இலங்கையர்கள் மரணிக்கின்றனர் என்று மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் விசேட ஊடக சந்திப்பு யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்றபோதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஊடக சந்திப்பில் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் புபுது சுமணசேகர உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 31ஆம் திகதி சர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு இருப்பதுடன் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் 2022ஆம் ஆண்டின் உலக புகையிலை எதிர்ப்புத் தினம் ‘சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்’ என்ற கருப்பொருளில் இடம்பெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.