பெண்களிடையே சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில் தையமிசின் இயந்திர உபகரணங்கள் வழங்கி வைப்பு.

பெண்களது குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பெண்களிடையே சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில் தையமிசின் இயந்திர உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டடது.

வை. டப்லியூ. எம். ஏ இன் ஏற்பாட்டில் பெண்களது குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பெண்களிடையே சுயதொழிலை ஊக்குவிக் வகையில் தையமிசின் இயந்திர உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அகில இலங்கை வை. எம். எம். ஏ பேரவையின் கேட்போர் கூடத்தில் வை. டப்லியூ. எம். ஏ இன் தலைவி பவாஸா தஹா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாக்கிஸ்தான் நாட்டு உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்க்கி அவர்களும் மற்றும் கௌரவ அதிதியாக அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசிய தலைவர் சஹீட் எம். ரிஸ்மி கலந்து கொண்டனர்
இதன் போது வை. டப்லியூ.எம். ஏ இன் உதவி ஆலோசகர் தேசமானிய மர்ளிய சித்தீக் அதன், பிரதிநிதிகள், பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

கொழும்பு, கண்டி, கந்தளாய், ஏறாவூர், கல்முனை உள்ளிட்ட இனங்காணப்பட்ட குடும்பப் பெண்களுக்கு இந்த தையல்மிசின் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.