ஆயிஷாவின் வீட்டுக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சிறுமியின் தாயாரிடம் நிதியுதவி.

சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேரில் சென்று நிதியுதவி வழங்கி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் இல்லத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று மாலை (04) ​நேரில் விஜயம் செய்தார்.

பண்டாரகம, அட்டுளுகமவில் அமைந்துள்ள ஆயிஷாவின் வீட்டுக்கு சென்ற அவர் ஆயிஷாவின் தாயார் மும்தாஸ் பேகத்துக்கு நிதியுதவியும் வழங்கி குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

அதனையடுத்து அங்கு கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, போதைப்பொருள் அச்சுறுத்தலால் பூக்கொத்தைப் போல மேலும் ஒரு சிறுமி துரதிர்ஷ்டவசமாக கொல்லப்பட்டதாகவும், இந்தப் பேரழிவு ஒழியும் வரை இதுபோன்ற அவலங்கள் ஓயாது.

சிறுமி ஆயிஷாவின் குடும்பத்துக்கு ஆறுதல்
தற்போது தேசிய பாதுகாப்பு என்பதற்கு பகரமாக ஆங்காங்கே கொலைகள் இடம் பெறுவதையே காணக் கூடியதாகவுள்ளது. சிறப்பு வாய்ந்த வழக்குகளின் சாட்சிகளும் கூட கொல்லப்பட்டுவருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

இந்த உணர்ச்சிகரமான தருணத்தில் எதிர்காலத்திற்கு குறிப்பிட்டளவு பக்கபலமாக இருக்கும் பொருட்டு, மறைந்த சிறுமி பாத்திமா ஆசியாவின் தாயாரான அமீர் மும்தாஸ் பேகத்திற்கு நிநியுதவிகளை வழங்கி வைத்த எதிர்க்கட்சித் தலைவர், எதிர்காலத்திலும் குடும்பத்திற்கு பக்கபலமாக இருப்பதாகவும் உறுதியளித்தார்.

இந்த விஜயத்தின் போது எதிர்க்கட்சித் தலைவரின் பாரியார் ஜலனி பிரேமதாசவும் உடன் சென்றிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.