ஜனாதிபதியின் அதிகாரத்தை 21ஆல் குறைக்க முடியாது : விரக்தியான ரணில்

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதியும் நேற்று நீண்ட நேரம் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தினேஷ் குணவர்தன மற்றும் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் கலந்துகொண்ட கலந்துரையாடலுக்கு அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் விஜேதாச ராஜபக்ஷ ஆகியோரை பிரதமர் அழைத்துச் சென்றுள்ளார்.

எவ்வாறாயினும், அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், சில முன்மொழிவுகள் ஜனாதிபதியினால் எதிர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதன்படி, பிரதமரை நியமித்தல், நீக்குதல், கெபினட் அமைச்சர்களை நியமித்தல் உள்ளிட்ட பல அதிகாரங்கள் தனது பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் எனவும், தனக்கு மக்கள் ஆணை வழங்கியது இப்போதைய அரசியலமைப்புக்குள் செயற்படுவதற்கு என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இரட்டைக் குடியுரிமை குறித்த ஷரத்து 21வது தனிநபரை இலக்காகக் கொண்டது என்ற பொது அபிப்பிராயம் இருப்பதால் அதில் சேர்க்கப்படக் கூடாது என்பதும், சட்டத்தால் அறிவுறுத்தப்பட்டதை பெரும்பான்மையால் திருத்தம் செய்யலாம் என்பதும் ஜனாதிபதி தரப்பின் கருத்தாக இருந்துள்ளது.

எனினும் சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பில் இரு குழுக்களும் சில இணக்கப்பாடுகளை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி ஜனாதிபதியின் பிரதம நிறைவேற்று அதிகாரம் தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டுக்கு வர முடியாமல் பிரதமர், நிமல் சிறிபால டி சில்வா மற்றும் விஜேதாச ராஜபக்ஷ ஆகியோர் விரக்தியோடு திரும்பியதாக தெரியவருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.