தம்மிக்கவுக்கு எதிரான 5 மனுக்களும் நிராகரிப்பு.

தம்மிக்க பெரேராவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட 5 மனுக்களையும் விசாரணைக்கு எடுக்காமலேயே உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அண்மையில் இராஜிநாமா செய்ததையடுத்து அவரின் வெற்றிடத்துக்குப் பிரபல கோடீஸ்வர வர்த்தகரான தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டிருந்தார்.

இதைச் சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அந்த மனுக்களே இன்று விசாரணைக்கு எடுக்கப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.