அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்சஒழிப்புத்துறை ரெய்டு

திருவரூர் மாவட்டம் மண்ணார்குடியில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், தமிழகம் முழுவதும 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. பண மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படியில் இந்த சோதனை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை உள்ளிட்ட இடங்களிலும் காலை முதலே இந்த சோதனை நடந்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.