அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சவுதி அரேபியா வந்தடைந்தார்.

உலக நாடுகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சவுதி அரேபியா வந்தடைந்தார்.

ஜித்தாவிலுள்ள கிங் அப்துல் அஸீஸ் விமான நிலையத்தில் இன்று வந்திறங்கிய பைடனுக்கு பலத்த வரவேற்பளிக்கப்பட்டது.

மத்திய கிழக்குக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி முதலில் இஸ்ரேலிய அதிகாரிகளை சந்தித்து பேசியிருந்தார்.பிறகு பலஸ்தீன தலைவர் முஹம்மது அப்பாஸை சந்தித்தார் அதன் பின் சவுதி அரேபியாவிற்கு சென்ற ஜோ பைடன் சவுதி மன்னர் சல்மானையும் இன்று சந்தித்தார்
பின்னர் இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பிற மூத்த சவூதி அதிகாரிகளுடனும் ஒரு பெரிய பேச்சுவார்த்தை ஒன்றையும் நடத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.