எஸ்.சி பிரிவு தலைவர் நியமனத்திற்கு எதிர்ப்பு.. கூண்டோடு ராஜினாமா செய்த காங்கிரஸ் நிர்வாகிகள்!!

எஸ்.சி பிரிவு தலைவர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 300க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக காங்கிரஸ் எஸ்.சி பிரிவு தலைவராக செல்வப்பெருந்தகை கடந்த 8 ஆண்டுகளாக பொறுப்பில் இருந்தார். அவரது பதவி காலம் முடிந்த நிலையில், கே.எஸ்.ஆழகிரியின் ஆதரவாளரான ரஞ்சன்குமார் தமிழக காங்கிரஸ் எஸ்.சி பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மாநில எஸ்.சி பிரிவில் பொறுப்பில் இருந்த முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

அப்பிரிவின் துணைத்தலைவர்கள், மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட எஸ் சி பிரிவு தலைவர்கள் என 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.

இதுதொடர்பாக புகார் கடிதத்தையும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளனர். அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில், இப்பிரிவில் கடந்த 8 ஆண்டுகளாக உழைத்தவர்களை இப்பதவிக்கு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பரிந்துரைக்காமல் தங்களை புறக்கணித்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.