நாடு கோரிய சமரசம் உறுதிப்படும்! டலஸ்-சஜித் நாட்டு மக்களுக்கு உரை! (VIDEO)

நாட்டுக்கு நல்ல செய்தி! நாடு கோரிய சமரசம் உறுதிப்படும்! டலஸ்-சஜித் ஒன்றாக அமர்ந்து நாட்டு மக்களுக்கு உரை! (காணொளி)

ஒருமித்தப் பயணம் இன்று ஆரம்பமாகி, தியவன்னாவிற்கு (பாராளுமன்றத்துக்கு)  அப்பால் மக்களின் வாழ்வை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்திற்கான உறுதிமொழிகள் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர்  டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இந்த தருணத்தில் நாட்டு மக்களுக்காக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாகவும், அதனை அறிமுகப்படுத்துவதற்கு தன்னை அர்ப்பணிப்பதாகவும் , இந்த நாட்டின் அரசியலுக்கு உண்மையான புதிய கலாச்சாரம் ஒன்றை உருவாக்கும் பணியை ஆரம்பித்துள்ளதாகவும் ,  ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தீர்மானித்திருந்து , அதிலிருந்து விலகி டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ள   எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச  தெரிவித்துள்ளார். 

இந்த நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்கவும், பத்தொன்பதாவது அரசியலமைப்பு திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்தவும், நாட்டை பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியாகவும் முன்னோக்கி கொண்டு செல்வதற்காக தன்னை அர்ப்பணித்து இந்த தீர்மானத்தை எடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும்  தெரிவித்தார்.

இந்நாட்டு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதே ஒரே நோக்கம் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அதற்காக தாம் உறுதிமொழி எடுப்பதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெரும மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் கலந்து கொண்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி , தங்களது ஆதரவை பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு வழங்க தீர்மானித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.