உடனடியாக அரசை கலைக்க வேண்டும் : சுமந்திரன்

தற்போதைய நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

காலிமுகத்திடல் அரகலய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதலுடன் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதமரும், அமைச்சரவையும் மக்கள் ஆணையை இழந்ததன் காரணமாகவே பதவி விலகியதாக அவர் மேலும் கூறினார்.

இன்றைய நிலையில் உள்ள மக்கள் கருத்துக்கு இடமளித்து நாடாளுமன்றத்தை கலைப்பதே இப்போது செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.