100 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய 6வது இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ்.

இந்தியாவின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சமீபத்தில் 100 டெஸ்ட் போட்டிக்கான பட்டியலில் இணைந்தார்.

இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மேத்யூஸ் 6.876 ரன்கள் எடுத்துள்ளார்.

பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கல்லேவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூசுக்கு இது 100-வது டெஸ்ட் போட்டி ஆகும். இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மேத்யூஸ் 6.876 ரன்கள் எடுத்துள்ளார்.

இதையடுத்து, போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, ஏஞ்சலோ மேத்யூசுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

மஹேலா ஜெயவர்த்தனே (149), குமார் சங்கக்கரா (134), முத்தையா முரளீதரன் (132), சமிந்தா வாஸ் (111), சனத் ஜெயசூர்யா (110) ஆகியோர் 100க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகள் விளையாடி உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.