அரகலய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செயற்பாட்டாளர்களுக்கு பயணத் தடை

அரகலய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செயற்பாட்டாளர்கள் 5 பேருக்கு வெளிநாட்டு பயணத்தடையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (25) பிறப்பித்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், கத்தோலிக்க அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், அனைத்து மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே, ‘மாற்றத்திற்கான இளைஞர்கள்’ அமைப்பின் தேசிய அமைப்பாளர் லஹிரு வீரசேகர மற்றும் எரங்க குணசேகர ஆகியோருக்கு எதிராகவே மேற்கண்ட தடை உத்தரவு பிறப்பிக்கப்ட்டுள்ளது.

ஜூன் 9 ஆம் திகதி பொலிஸ் தலைமையகம் முன்பாக போராட்டம் நடத்தி பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் , கோட்டை பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கோட்டை நீதவான் திலின கமகேவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.