காமன்வெல்த் போட்டி – முதல் போட்டியில் கானாவை வீழ்த்தியது இந்திய மகளிர் ஹாக்கி அணி.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. குருப் ஏ பிரிவில் இந்தியா, கானா அணிகள் இடம்பிடித்துள்ளன.

முதல் நாளில் நடந்த மகளிருக்கான ஹாக்கி போட்டியில் இந்தியா, கானா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் குர்ஜித் கெளர் (3,39), நேகா (28), சங்கீதா குமாரி (36), சலிமா டேடே (56) ஆகியோர் கோல்களை அடித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.