ஆகஸ்ட் 3 இல் மனோவின் கட்சி முக்கிய தீர்மானம்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமைப் பதவியில் இருந்து மனோ கணேசன் விலகமாட்டார் எனத் தான் நம்புவதாக கூட்டணியின் பிரதித் தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே. இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமைப் பதவியிலிருந்து விலகவுள்ளார் என்று மனோ கணேசன் அறிவித்துள்ள நிலையில், கூட்டணிக்குள் இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இராதாகிருஷ்ணன் எம்.பியிடம் ஊடகம் ஒன்று தொடர்பு கொண்டு கேட்டபோது,

“தலைவர் மனோ, எதற்காக இப்படியொரு முடிவு எடுத்தார் என்பது குழம்பமாக இருக்கின்றது.

இது கூட்டணிக் கட்சிகளுக்கிடையிலான முரண்பாடு அல்ல. செயலாளருக்கும், தலைவருக்கும் இடையிலான எழுத்து முரண்பாடே ஆகும்.

இதனைவிட, அனைத்து அரசியல் கட்சிகளுக்குள்ளும் முரண்பாடுகள் இருப்பதும், அவற்றைத் தீர்த்துக் கொள்வதும் வழமையானது.

எதிர்வரும் 3ஆம் திகதி தமிழ் முற்போக்குக் கூட்டணி கூடி, இது குறித்து ஆராயும்.

சர்வகட்சி அரசை ஸ்தாபிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் அனைவருக்கும், ஜனாதிபதி அனுப்பியுள்ள கடிதம் எனக்கும் கிடைத்துள்ளது. கூட்டணியாக இது குறித்தும் எதிர்வரும் 3ஆம் திகதி ஆராய்ந்து முடிவெடுப்போம்” – என்று பதிலளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.