சூர்யகுமார் அதிரடி – 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி ..

முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 164 ரன்களை எடுத்துள்ளது. அடுத்து ஆடிய இந்தியா 165 ரன்களை எடுத்து வென்றது.

வெஸ்ட் இண்டீஸ், இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி செயிண்ட் கிட்சின் பாசட்டரேவில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது.

பொறுப்புடன் ஆடிய கைல் மேயர்ஸ் அரை சதமடித்தார். அவர் 50 பந்தில் 73 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய பாவெல் 23 ரன்னும், ஹெட்மயர் 20 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்தியா சார்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான ரோகித் சர்மா 11 ரன் எடுத்திருந்தபோது காயமடைந்து பெவிலியன் திரும்பினார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி சிறப்பாக ஆடியது. சூர்யகுமார் அரை சதமடித்தார். அய்யர் 24 ரன்னில் அவுட்டானார்.

சூர்யகுமார் 44 பந்துகளில் 4 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 76 ரன்கள் குவித்தார். ஹர்திக் பாண்ட்யா 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ரிஷப் பண்ட் பொறுப்புடன் ஆடி 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிபெறச் செய்தார். இறுதியில், இந்தியா 19 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் டி20 தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.